Monday, September 30, 2013

மக்களுக்கான அரசியல் எது?

தமிழ் சமூகத்தில் சாதி என்பது கலாசாரத்தை வளர்த்த ஒரு கருவியாகவே அமைந்திருக்கிறது. ஒவ்வொரு சாதியும் , ஒவ்வொரு வகையான வாழ்வியல் முறைகளை பின்பற்றுகின்றன . தமிழகத்தின் நாகரீகம் , பொருளாதாரம் , கல்வி ஆகியவற்றின் வளர்ச்சி சாதி அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பது கண்கூடு.  தமிழக மக்கள் கடவுளை வழிபடுகிறார்கள். பல விதமான சடங்கு முறைகள், அவர்கள் வாழ்க்கையோடு பின்னிபினைந்து உள்ளது.  மக்கள் குறிப்பிட்ட மத கடவுளை வழிபட்டாலும், அந்த மதமாக தங்கள் கலாசாரத்தை அமைத்து கொள்ளவில்லை , சாதியின் அடிப்படையிலேயே பழக்கவழக்கங்கள்(எ. கா : இரு தாலி, இறப்பு சடங்குகள்) அமைகின்றன.

இயல்பு வாழ்க்கை இப்படி இருக்க, யதார்த்த மக்களின் வாழ்க்கைக்கு முரணாக  தி.க , பா.ஜ.க, திமுக , அதிமுக , கம்யூனிஸ்ட் , தேமுதிக , நாம் தமிழர் போன்ற இயக்கங்கள் கொள்கைகளை கொண்டுள்ளன.

திக , திமுக , அதிமுக,  ---   திராவிடம்( மாற்று மொழியினரை வளர்த்து , தமிழரை ஒழிப்பது), கடவுள் மறுப்பு , பெரும்பான்மை மக்கள் நம்பிக்கைகளை கிண்டல் செய்வது இவர்கள் கொள்கை

தேமுதிக - கொள்கை யா அப்படி என்றால்?

பிஜேபி , ஆர் எஸ் எஸ் ---  சாதியை தாண்டி இந்து வாக ஒன்று கூடுதல் , சாதி அடிப்படையில்  இட ஒதுக்கீடு கூடாது

கம்யூனிஸ்ட் --   உழைக்கும் மக்களின் முன்னேற்றம் , தலித்துகள் தவிர வேறு யாரும் உழைக்கும் மக்கள்  அல்ல



மக்கள்  இந்துத்துவ தத்துவங்களை தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறார்கள். ஏனெனில் இடஒதுக்கீடு மற்றும் சாதிக்கு எதிரான அவர்களது கொள்கை தங்கள் வாழ்வாதாரதிர்க்கே வேட்டு வைத்து விடும் என்பதை அறிந்திருப்பதால்.  திராவிட இயக்கங்கள் கடவுள் வழிப்பாட்டையும் எதிர்க்கின்றன, சாதிகளையும் எதிர்க்கின்றன. மக்கள் திராவிட இயக்கங்களுக்கு வாக்கு பிச்சை போட்டாலும் , அவர்களது கொள்கைகளை வாழ்வில் பின்பற்றுவது இல்லை. இடைக்காலத்தில் பெரியார் போன்றவர்கள் ஏற்படுத்திய மாயை , பிராமண எதிர்ப்பு , இலவசங்களுக்கு மதி மயங்கியே வாக்களிக்கிறார்கள்.

இன்றைய அரசியல் சூழலில் , கடவுள் மறுப்பு இல்லாத , அனைத்து சாதிகளுக்கும் அவர்களின் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு , தீண்டாமை ஒழிப்பு , பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுக்கிற , தமிழ் கலாசாரத்தை காக்கிற கொள்கைகளையுடைய கட்சியே மக்களுக்கான கட்சியாக இருக்க முடியும்.


நாம் மேற்கண்ட இயக்கங்கள் எல்லாம் பெரியார் , கார்ல் மார்க்ஸ் , அம்பேத்கர் போன்ற தலைவர்களில் ஒருவரை  முழுமையாக பின்பற்றும் கட்சியாகவே உள்ளன. இந்த மூன்று தலைவர்களின் கொள்கைகள் முழுவதும் மக்களுக்கான வெற்றிகளை தருவனவாக இல்லை.

இந்நிலையில் பெரியாரிடத்தில் இருந்து சமூகநீதியையும் , மார்க்ஸ் இடமிருந்து பாட்டளிகளின் முன்னேன்றதிர்க்கான முறைகளையும் , அம்பேத்காரிடமிருந்து ஒரு சமூக தலைவருக்கான பண்புகளையும் எடுத்து மக்களுக்கு தேவையான மக்களின் அரசியலை முன்னெடுத்து வரும் ஒரே அரசியல் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்கிறது.


ஆனால் பாமக தமிழகத்தில் ஏன் இன்னும் ஆளும் அதிகாரத்தை கைப்பற்றவில்லை. அனைத்து கட்சிகளிலும் உள்ளது போல , கீழ்மட்ட தலைவர்களின் தவறான செயல்பாடுகள் , தொண்டர்களை மதியாமை, தலைமையின் ஒரு சில சுயசார்பான முடிவுகள் என ஒப்புக்கான காரணங்கள் இருந்தாலும். ஆழமாக ஆய்வு செய்யும் பொழுது

1. தமிழ் சமூகத்தின் பெரும்பான்மை சமூக மக்கள் பாமக வை ஆதரிப்பதும்
2. பெரும்பான்மை மக்கள் ஆதரிப்பதால் சிறுபான்மை பாதிக்கபடுவார்கள் என்ற யதார்தத்திர்கெதிரான  மனோநிலை பரப்ப பட்டிருப்பது  
3. பாமக வை பெரிதும் ஆதரிக்கும் சமூகத்தினர் வன்முறையாளர்கள் என்ற பொய்பிரசாரம்
4. மொழி சிறுபான்மையினர் தாங்கள் அனுபவித்து வரும் அரசியல் அதிகாரங்கள் பறிபோய்விடும் என்பதால் செய்திருக்கும் சொல்லத்தகாத நுண்ணரசியல் சதிகள்


போன்ற மேற்கண்ட தவறாக பரப்பபட்டிருக்கும் காரணிகளே   மக்கள் நல்லாட்சியை தொடர்ந்து இழந்து கொண்டிருப்பதற்கு காரணமாக தெரிகிறது. மேற்கண்ட மாயைகளை  மக்களிடத்தில் எடுத்து கூறி மக்களை மரண பாதையிலிருந்து மடை மாற்றி மகத்தான பாதைக்கு திருப்புவது இன்றைய இளைஞர்களின் முன்னே இருக்கும் மாபெரும் பணி. இதனை அரசியல் விழிப்புணர்வு பெற்ற அனைத்து தமிழ் இளைஞர்களும் இணைந்து செய்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தி தமிழகத்தின் விடியலுக்கு பாடுபட வேண்டும்.

 
 .