Friday, August 24, 2007

சாதி வெறிக்கு எதிரான ச‌ன‌நாய‌க‌த்தின் வெற்றி

ந‌ம் நாட்டில் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு எதிரான‌ வ‌ன்முறைக‌ள் நீண்ட‌ கால‌மாக‌ நிக‌ழ்ந்த‌ வ‌ண்ண‌ம் இருக்கின்ற‌ன‌.ப‌ல‌ ஆண்டுக‌ளுக்கு முன்னால், தஞ்சாவூருக்கு அருகிலுள்ள‌ கீழ‌வெண்ம‌ணியில் உழைபாள‌ர்க‌ள் ப‌ல‌ர் கொல்லப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கில் குற்ற‌ம்சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் விடுதலை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். பின்ன‌ர் குற்ற‌ம்சாட்ட‌ப்ப‌ட்ட‌ ந‌ப‌ர் கோபாலகிருசுண‌ நாயுடு கொலையுண்டார்.
ஆனால் பிந்தைய‌ கால‌ங்க‌ளில், மேலூருக்கு அருகில் உள்ள மேலவளவில் நடைபெற்ற கொலைக்கு தண்டணை கிடைத்தது. தற்பொழுது சட்டம் மற்றும் சமூக நீதிக்காக போராடுப‌வ‌ர்க‌ளுக்கு ம‌கிழ்ச்சிய‌ளிக்கும் ஒரு தீர்ப்பு சூலை மாத‌ இறுதியில் வ‌ந்துள்ள‌து. அந்த‌ வ‌ழ்க்கு உய‌ர்சாதியின‌ரின் கொடூர‌ முக‌த்தின் வெளிப்பாடு.
ஆந்திர‌ மாநில‌ம் விச‌ய‌வாடாவுக்கு அருகில் உள்ள‌து சுண்டூர் கிராம‌ம். இந்த ஊரில் உள்ள மக்கள் அரசின் இடஒதுக்கீட்டை பயன்படுத்தி கல்வி, வேலை வாய்ப்பினை பெற்றிருந்தனர். இந்த வள்ர்ச்சியை பொருக்கத உயர்சாதி ரெட்டியார்கள், ஒரு பெண்ணை தலித் இளைஞன் கேலி செய்ததாக கூறி பிரச்சனை வெடித்தது. இதன் விளைவாக‌ 1991, ஆக‌சுடு 6ம் தேதி எட்டு த‌லித் ம‌க்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து ச‌ட‌ல‌ங்க‌ள் துண்டு துண்டாக‌ வெட்ட‌ப்ப‌ட்டு கால்வாயில் வீச‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ வ‌ழ‌க்குதான் வ‌ன்கொடுமை த‌டுப்பு ச‌ட்ட‌தின்(1989) கீழ் தொட‌ர‌ப்ப‌ட்ட‌ முத‌ல் வ‌ழ‌க்கு. இந்த‌ வ‌ழ‌க்கை திசை திருப்ப‌வும், சாட்சிக‌ளை விலைக்கு வாங்க‌வும் முய‌ற்ச்சிக‌ள் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. அதை எதிர்த்து வீரிய‌மான போராட்ட‌ங்க‌ள் ந‌டைபெற்ற‌து. அத்த‌கைய‌ போர‌ட்ட‌த்தின் போது அனில்குமார் என்ற‌ இளைஞ‌ன் போலீசாரால் சுட்டு கொல்ல‌ப்ப‌ட்டான். இப்ப‌டி தொட‌ர்ச்சியான‌ போராட்ட‌தினால், வ‌ழ‌க்கு விசாரணையின் முடிவில் 21பேருக்கு ஆயுள் த‌ண்ட‌ணை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
ஆனால் ஒட்டு மொத‌மாக‌ ப‌ர்க்கும் பொழுது 3.75% வ‌ழ‌க்குக‌ளில் ம‌ட்டுமே தண்டணை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இருந்தாலும் இத‌னை முன்னுதார‌ண‌மாக‌ கொண்டு பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் போராட‌ வேண்டும் என்ப‌தே என் வேன்டுகோள்.
இது போன்ற‌ தீர்ப்புகள் சாதி வெறிக்கு எதிரான வெற்றிக்கு அடித்த‌ள்ம் அல்ல‌வா?

Wednesday, August 22, 2007

எது மாற்று சக்தி?


தி.மு.க‌, அ.தி.மு.க‌ ஆகிய கட்சிகளின் ஆட்சிக‌ளால் தமிழகம் சீரழிந்துள்ளது. விவ‌சாய‌த்தில் ந‌லிவு, சில்ல‌றை வ‌ணிக‌த்தில் பெரும் முதலாளிக‌ள், அர‌சு அலுவ‌ல‌க‌ங்க‌ளில் ல‌ஞ்சம், ம‌ணல் கொள்ளை ஆகியவற்றால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இவ‌ற்றிலிருந்து எப்படி விடுத‌லை பெறுவது? இந்த‌ கேள்விக்கு, தமிழகத்தின் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தன்னை அறிவித்து கொண்டுள்ள விஜயகாந்த் கூறிய விடை, தான் லஞ்சம், ஊழல் அற்ற நிர்வாகத்தை தருவேன் என்றதுதான். ஆனால் அவரது கட்சியே ஊழல்வாதிகளின் கூடாரமாக இருக்கிறது. தே.மு.தி.க வின் துணை பொதுச்செயலளர் கு.ப.கிருட்டினன் அவர்கள் ஊழல் வழக்கில் கைதானவர், கோவை மாவட்ட தலைவர் ஓர் ஏழை தாயின் நிலத்தை ஏமாற்றியதாக கூறபட்டவர். இவ்வாறு ஊழல்வாதிகளை கட்சியில் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்போம் என்கிறீர்களே என விஜயகாந்திடம் கேட்டால் " கடல் நீரில் என்ன கலந்தாலும் அதன் உப்பு தன்மை மாறாது " என்கிறார். அப்படியானால், இவரது கட்சி என்ன கார்ப்பரேட் கம்பெனியா?, இவர் ஒருவர்தான் கட்சியா?. இது போக "ஊழல் என்பது தர்க்க ரீதியாக ஒரு தனி மனிதனின் ஒழுக்கத்தை சார்ந்தது". இவர் கட்சியில் உள்ளவர்களே ஊழல்வாதிகளாக இருக்கும்போது இவரால் எப்படி இந்த சமுதயத்திற்கு ஊழலற்ற ஆட்சியை தரமுடியும் . தி.மு.க‌, அ.தி.மு.க என்ற இரு போலி திராவிட‌ க‌ட்சிக‌ளின் ஆட்சிப்பிடியிலிருந்து த‌மிழ் தேச‌ம் மீள‌ வ‌ழிதான் என்ன‌? தி.மு.க‌, அ.தி.மு.க‌ அல்லாத‌ ஒரு கூட்ட‌ணிதான் இன்றைய‌ தேவை. இன்று அனைத்து த‌ர‌ப்பு ம‌க்க‌ளின் வாழ்வாதார‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்காக‌ போராடிவ‌ரும் பா.ம‌.க‌, க‌ம்யூனிசுடுக‌ள், விடுத‌லை சிறுத்தைக‌ள், புதிய‌ த‌மிழ‌க‌ம், மூவேந்த‌ர் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம், த‌மிழ‌ர் தேசிய‌ இய‌க்க‌ம், திராவிட‌ க‌ட்சி ஆகிய‌வை ஒன்றுகூடினால் ந‌ல்லாட்சியை கொடுக்க‌ இய‌லும்.

Thursday, August 9, 2007

தமிழக மறுமலர்ச்சியும் பா.ம.கவும்


இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றில் தமிழ்நாட்டிற்கு எப்பொழுதுமே தனித்த பாரம்பரியமும், சுயமரியாதை பின்னனியும் உண்டு. தமிழ் மாநிலத்தின் தனித்துவத்தை பிரதிநிதித்துவம் செய்து வந்த திராவிட கட்சிகள் சோரம் போன நிலையில் மருத்துவர் ராமதாசு தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் முன்கை எடுத்திருக்கிறது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு நதிநீர்ப் பிரச்சனைகள் தொடங்கி தாமிரபரணியில் நடக்கும் மணல் கொள்ளை, டாடாவின் கனிம கொள்ளை என அத்தனை மக்கள் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்கும் கட்சியாக பா.ம.க பரிணமித்திருக்கிறது.