Friday, August 24, 2007

சாதி வெறிக்கு எதிரான ச‌ன‌நாய‌க‌த்தின் வெற்றி

ந‌ம் நாட்டில் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு எதிரான‌ வ‌ன்முறைக‌ள் நீண்ட‌ கால‌மாக‌ நிக‌ழ்ந்த‌ வ‌ண்ண‌ம் இருக்கின்ற‌ன‌.ப‌ல‌ ஆண்டுக‌ளுக்கு முன்னால், தஞ்சாவூருக்கு அருகிலுள்ள‌ கீழ‌வெண்ம‌ணியில் உழைபாள‌ர்க‌ள் ப‌ல‌ர் கொல்லப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கில் குற்ற‌ம்சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் விடுதலை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். பின்ன‌ர் குற்ற‌ம்சாட்ட‌ப்ப‌ட்ட‌ ந‌ப‌ர் கோபாலகிருசுண‌ நாயுடு கொலையுண்டார்.
ஆனால் பிந்தைய‌ கால‌ங்க‌ளில், மேலூருக்கு அருகில் உள்ள மேலவளவில் நடைபெற்ற கொலைக்கு தண்டணை கிடைத்தது. தற்பொழுது சட்டம் மற்றும் சமூக நீதிக்காக போராடுப‌வ‌ர்க‌ளுக்கு ம‌கிழ்ச்சிய‌ளிக்கும் ஒரு தீர்ப்பு சூலை மாத‌ இறுதியில் வ‌ந்துள்ள‌து. அந்த‌ வ‌ழ்க்கு உய‌ர்சாதியின‌ரின் கொடூர‌ முக‌த்தின் வெளிப்பாடு.
ஆந்திர‌ மாநில‌ம் விச‌ய‌வாடாவுக்கு அருகில் உள்ள‌து சுண்டூர் கிராம‌ம். இந்த ஊரில் உள்ள மக்கள் அரசின் இடஒதுக்கீட்டை பயன்படுத்தி கல்வி, வேலை வாய்ப்பினை பெற்றிருந்தனர். இந்த வள்ர்ச்சியை பொருக்கத உயர்சாதி ரெட்டியார்கள், ஒரு பெண்ணை தலித் இளைஞன் கேலி செய்ததாக கூறி பிரச்சனை வெடித்தது. இதன் விளைவாக‌ 1991, ஆக‌சுடு 6ம் தேதி எட்டு த‌லித் ம‌க்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து ச‌ட‌ல‌ங்க‌ள் துண்டு துண்டாக‌ வெட்ட‌ப்ப‌ட்டு கால்வாயில் வீச‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ வ‌ழ‌க்குதான் வ‌ன்கொடுமை த‌டுப்பு ச‌ட்ட‌தின்(1989) கீழ் தொட‌ர‌ப்ப‌ட்ட‌ முத‌ல் வ‌ழ‌க்கு. இந்த‌ வ‌ழ‌க்கை திசை திருப்ப‌வும், சாட்சிக‌ளை விலைக்கு வாங்க‌வும் முய‌ற்ச்சிக‌ள் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. அதை எதிர்த்து வீரிய‌மான போராட்ட‌ங்க‌ள் ந‌டைபெற்ற‌து. அத்த‌கைய‌ போர‌ட்ட‌த்தின் போது அனில்குமார் என்ற‌ இளைஞ‌ன் போலீசாரால் சுட்டு கொல்ல‌ப்ப‌ட்டான். இப்ப‌டி தொட‌ர்ச்சியான‌ போராட்ட‌தினால், வ‌ழ‌க்கு விசாரணையின் முடிவில் 21பேருக்கு ஆயுள் த‌ண்ட‌ணை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
ஆனால் ஒட்டு மொத‌மாக‌ ப‌ர்க்கும் பொழுது 3.75% வ‌ழ‌க்குக‌ளில் ம‌ட்டுமே தண்டணை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இருந்தாலும் இத‌னை முன்னுதார‌ண‌மாக‌ கொண்டு பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் போராட‌ வேண்டும் என்ப‌தே என் வேன்டுகோள்.
இது போன்ற‌ தீர்ப்புகள் சாதி வெறிக்கு எதிரான வெற்றிக்கு அடித்த‌ள்ம் அல்ல‌வா?

No comments: