Tuesday, January 7, 2014

பெரும்பான்மையினரும் இந்நாட்டின் மக்களே

லயோலா கல்லூரி இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்ற அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்களை சிறுபான்மையினரே நிறைய நடத்துகின்றனர். இப்படி இருக்கையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டாம் என்றால் , ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் நிலை என்ன ஆவது? சட்டமே இப்படி பெரும்பான்மை மக்களை ஒதுக்கினால் , சிறுபான்மையினருக்கும் , பெரும்பான்மையினருக்கும் எப்படி இணக்கம் உருவாகும். இது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.