Sunday, January 27, 2013

வன்னியனே எங்கே செல்கிறாய்?

வன்னியர்களின் வாழ்வியல் நிலையை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்ட  வன்னியர் சங்கமும்,  பாட்டாளி மக்கள் கட்சியும் மருத்துவர் அய்யா தலைமையில் வன்னிய மக்களின் உரிமைகளுக்காக போராடியது. 1987 ல் 21 உயிர்களை இழந்து நடத்தப்பட்ட சமூக நீதிக்கான சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து , காங்கிரஸ் அரசு வன்னிய பிரதிநிதிகளை வாழப்பாடியார் மூலமாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. திரு மூப்பனார் போன்றவர்களின் சூழ்ச்சியால் வன்னியர்களுக்கான தனி  இடஒதுக்கீடு  நழுவி போனது. இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் பாமக தன பலத்தை நிரூபிக்கும் விதமாக வெற்றிகளை பெற்றது. 

அப்பொழுது ஆட்சிக்கு வந்த குள்ள நரி கருணாநிதி, தன்னிடம் உள்ள வன்னிய திராவிட கிறுக்கன்களோடு, மற்ற வன்னியர்களின்(பாமக) ஓட்டுகளையும்  பெறுவதற்காக , 108 சாதிகளை சேர்த்து  மிகவும் பிற்படுதபட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கியது. இந்நிலையில் திராவிட கட்சிகளில் உள்ள வன்னிய சொந்தங்களை பாமக விற்கு கொண்டு வருவதற்கான பரப்புரையை மேற்கொள்ளாமல் , திராவிட மாயையில் தன்னையும் தொலைத்து , சில தற்காலிக வெற்றிகளை பெற தொடங்கியது பாமக. தமிழகத்தின் 2 திராவிட கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு பாமக விடம் கூட்டணி வைத்து மாறி மாறி அரியணை ஏறினர். அதே சமயம் பாமக விற்கு இடங்கள்  தந்ததால், தங்கள் கட்சியில் வன்னியர் பகுதிகளில் கூட மாற்று சமூகத்தினருக்கு வாய்ப்புகளை வழங்கின திராவிட கட்சிகள். 

இவ்வாறான சூழ்நிலையில் மருத்துவர் அய்யா அவர்கள் தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் முதல் ஆளாக குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தினார் . சமசீர்கல்வி என்ற வார்த்தை வழக்கத்தில் வருவதற்கு காரணம் மருத்துவர் அய்யா தான் எனலாம். இவ்வாறு தமிழன போராளியாக அய்யா உருவெடுத்தாலும் , மாற்று சமூகத்தினர் வன்னிய தலைவராகவே பார்த்தனர். அய்யாவின் தமிழை நோக்கிய பயணத்தில் வன்னிய இளைஞர்கள் சோர்வடைந்தனர். தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் அரசியல் எழுச்சி தங்களின் வீழ்ச்சி என்று எண்ணிய  திராவிடர்கலும் இதர தமிழ் சிறுபான்மையினரும் கூட்டணியில் இருந்தாலும் பாமக விற்கு வாக்களிக்கவில்லை. 

இப்படி சூழ்சிகளாலும் , வஞ்சனைகளாலும் நரிகள் ஒரு இனத்தையே வீழ்த்த துடித்து கொடிருந்த தருவாயில் , அய்யா அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து, இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவை அறிவித்தார்கள்.இது மீண்டும் வன்னிய இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை கீற்றுகள் துளிர்க்க தொடக்கமாய் அமைந்தது. இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக நம் மீது திட்டமிட்டு பல வருடங்களாய் நடதட்டப்பது வரும் மானப்ப்போரின் , ஒரு நிகழ்வு (தருமபுரி ) ஏற்படுத்திய ஆறா வடுக்கு மருந்திட நாதியில்லாமல் நின்ற இனத்திற்கு , மருத்துவர் அய்யா தகப்பனாய் நின்று தேற்றி கொண்டிருக்கிறார். இப்பொழுது நடக்கின்ற மாற்றங்கள் ஊடகங்களை பார்க்கின்ற , படிகின்ற ஒரு சாராரை மட்டுமே சென்றடைகிறது. இவற்றை மீறி வெற்றி பெற அனைத்து கருத்துகளும் சாதாரண மக்களுக்கும் கொண்டு சென்றாலொழிய முன்னேற்றம் சாத்தியபடாது.   

இன்று, சிதறி கிடந்த எம்மினம் சேர்ந்து வருகிறது , சேர துடிக்கிறது ...... தன்னை சூழ்ந்திருந்த திராவிடம் என்ற முற்போக்கு வியாதியிலிருந்து  மீள முடியாமல் சிலர் தவிக்கின்றனர். "கொள்ளையர்கள்" என குள்ள நரி சொல்லிய வார்த்தை திராவிட நோயாளிகளின் நெஞ்சங்களில் முள்ளாய் குத்தி உறுத்தி கொண்டிருக்கிறது. 

ஏ பெரியார் எனும் பேயினால் பீடிகைக்கப்பட்ட சொந்தங்களே ,  திராவிட இருளிலிருந்து , வெளிச்சத்தை நோக்கி வாருங்கள். நமக்குள் இருக்கும் சிறு சிறு சகோதர சண்டைகளை , மறக்க விட்டு பாமகவிற்கு வாருங்கள். நம் இன முன்னேற்றத்தை முன்னெடுப்போம்.     

Monday, September 10, 2012

அணுமின்சாரமும் , மக்கள் போராட்டங்களும்

உலக மின் நுகர்வோர்கள் வரும் காலங்களில் அணு மின்சாரத்தையே சார்ந்து இருக்க முடியும் எனும் பொய் பிரசாரத்தை முன் வைத்து இந்தியாவும் அணுமின் நிலையங்களை அமைக்க தொடங்கியது . இந்திய அரசு 63000MW மின் உற்பத்தி என்ற இலக்கை 2032 ம் ஆண்டிற்குள் ,அணுமின்சாரத்தின் வழியாக பெற திட்டமிட்டுள்ளது .  இதே இந்திய அரசு 1970 ஆம் ஆண்டில் வெளியிட்ட  அறிக்கையில் ௨௦௦௦ ஆவது ஆண்டில் 43,000 மெகாவாட் அணுமின்சாரம் உற்பத்தி என்ற இலக்கை அடைவோம் என்று  கூறியது. ஆனால் இந்தியாவில் உள்ள ஆறு அணுமின் நிலையங்களிலிருந்தும்  2011 ஆண்டு வரை வெறும் 4780 MW என்ற இலக்கையே எட்ட முடிந்திருக்கிறது.  1990  களிலிருந்து ரஷ்யாவையும் , தற்பொழுது ஆஸ்திரேலியாவிடமும் உரேநியதிற்காக கையேந்தி கொண்டிருகிறது இந்தியா. அணு மின்சாரத்திற்கான செலவும் மிக அதிகம்.

உலகிலேயே அதிக அணு உலைகள் உள்ள பகுதி மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆகும். அங்குள்ள 18 நாடுகளில் எட்டு நாடுகள் அணுமின்சாரத்திட்டங்கள் இல்லாத பகுதி என அறிவித்து விட்டன. 4 நாடுகள் புதிய அணு உலைகள் தொடங்க மாட்டோம் எனக் கூறிவிட்டன. செர்மனி நாடு 2022 க்குள் அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாகக் கூறிவிட்டது. அங்கு வெறும் மூன்று நாடுகள் மட்டுமே அணுமின்சாரத்தை ஆதரிக்கின்றன. ஐரோப்பா முழுவதிலும் கடந்த 30 ஆண்டுகளாக புதிய அணுமின் திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை.

இதே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் அணு மின்சாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேற்கு வங்கஅரசு தனது மாநிலத்தில், 6 ருசிய ரியாக்டர்களை கொண்டு 6000 MW மின்சாரம் உற்பத்தி செய்யகூடிய அணு மின் திட்டத்தை ஏற்காமல் தடுத்து நிறுத்தியது.  அணுமின்  நிலையங்களில் ஏதேனும் விபத்துகள் நடந்து சேதங்கள் ஏற்பட்டால் , யார் , எவ்வளவு நிதி உதவி வழங்குவது என்பதிலும் தெளிவான வழி காட்டுதல்கள் இல்லை என்று கூறபடுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தின் தென் பகுதியில் இருக்க கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, அதன் தொடக்க நிலையிலிருந்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய மற்றும் தமிழக அரசுகள்  தொடக்கதிலிருந்தே இந்த மக்கள் போராட்டத்தை அலட்சிய படுத்தி வந்தன. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த போராட்டங்கள் கூர்மைபடுதபட்டன.  கூடங்குளம் பகுதியை சாராத மக்கள் மனதில் , " இந்த திட்டத்தின் தொடக்கதிலிருந்தே இதனை எதிர்த்து கட்டுமான நிலையிலேயே எதிர்த்து இருக்கலாமே?  , இப்பொழுத் நிறுத்தினால் பல ஆயிரம்  கோடி மக்கள் வரி பணம் வீணாகாதா? என பல கேள்விகள் எழுந்திருக்கலாம். ஆனால் தொடக்கத்திலிருந்து நிகழ்ந்த மக்கள் போராட்டங்கள் அனைத்தும் அரசுகளால் புரந்தள்ளபட்டன என்பதும் , ஊடகங்களால் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்பதுமே உண்மை.

நமக்கு மின் சக்தி மிக அவசியமானதுதான் , ஆனால் அது நம் மக்களின் வாழ்கையை அடகுவைத்து தான் பெறப்பட வேண்டுமா ? அரசு தற்பொழுது நிறுவியுள்ள அணுமின் நிலையம் மூன்றடுக்கு பாதுகாப்புடன் இருப்பதாக ஈற்று கொண்டாலும், நம் அறிவிற்கு எட்டாத புது விதமான இயற்கை பேரழிவுகள் ஏதேனும் ஏற்பட்டு அதனால் அணுகதிர் வீச்சு வெளியேறினால் எத்துனை ஆயிரம் மக்கள் பாதிக்கபடுவார்கள்? இன்றும் கல்பாக்கம் பகுதியில் பிறக்கின்ற குழந்தைகள் பாதிப்புக்குளாகின்றனர்.
 கடந்த வார இறுதியில் ஸ்டான்போர்ட் பல்கலைகழக ஆய்வு குழுவினர் வெளியிட்ட அறிக்கை  காற்றின் மூலம்  1800 TW  மின்சாரம் பெற முடியும் என்று கூறுகிறது. இது உலக மின்தேவையான 18 TW போன்று 100 மடங்கு அதிகமானது.எனவே அரசு மக்களின் போராட்டத்திற்கு செவி மடுத்து , காற்று மற்றும் சூரிய மின் உற்பத்திகளை பெருக்கி நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்வதே  சாலச்சிறந்ததாகும்.

Thursday, January 10, 2008

வருண பேதம்

பகுதறிவு கொள்கை இந்துகளுக்கு எதிராக மட்டுமே ஏவப்பட்டுள்ள்து. மற்ற மார்கங்களில் உள்ள மூட பழக்கவழக்கங்களை சாடவில்லை என்பது மிக வருந்ததக்கது. அதே தருணம் இந்து மத சம்பிரதாயாங்களால் ஏமாற்றப்படும் மக்களே அதிகம். வேதம் என்ற பெயரால் வருணங்களை ஏற்படுத்தி மக்களை அடிமைபடுத்திய பிராமணர்களை என்ன செய்வது. பகுதறிவு கொள்கை பெரும்பான்மை மக்களுக்கு எதிராக உள்ளது போல, இந்து மத வகுப்புவாதங்களும் எற்றுகொள்ளகூடியது அல்ல.

Tuesday, September 25, 2007

Friday, August 24, 2007

சாதி வெறிக்கு எதிரான ச‌ன‌நாய‌க‌த்தின் வெற்றி

ந‌ம் நாட்டில் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு எதிரான‌ வ‌ன்முறைக‌ள் நீண்ட‌ கால‌மாக‌ நிக‌ழ்ந்த‌ வ‌ண்ண‌ம் இருக்கின்ற‌ன‌.ப‌ல‌ ஆண்டுக‌ளுக்கு முன்னால், தஞ்சாவூருக்கு அருகிலுள்ள‌ கீழ‌வெண்ம‌ணியில் உழைபாள‌ர்க‌ள் ப‌ல‌ர் கொல்லப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கில் குற்ற‌ம்சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் விடுதலை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். பின்ன‌ர் குற்ற‌ம்சாட்ட‌ப்ப‌ட்ட‌ ந‌ப‌ர் கோபாலகிருசுண‌ நாயுடு கொலையுண்டார்.
ஆனால் பிந்தைய‌ கால‌ங்க‌ளில், மேலூருக்கு அருகில் உள்ள மேலவளவில் நடைபெற்ற கொலைக்கு தண்டணை கிடைத்தது. தற்பொழுது சட்டம் மற்றும் சமூக நீதிக்காக போராடுப‌வ‌ர்க‌ளுக்கு ம‌கிழ்ச்சிய‌ளிக்கும் ஒரு தீர்ப்பு சூலை மாத‌ இறுதியில் வ‌ந்துள்ள‌து. அந்த‌ வ‌ழ்க்கு உய‌ர்சாதியின‌ரின் கொடூர‌ முக‌த்தின் வெளிப்பாடு.
ஆந்திர‌ மாநில‌ம் விச‌ய‌வாடாவுக்கு அருகில் உள்ள‌து சுண்டூர் கிராம‌ம். இந்த ஊரில் உள்ள மக்கள் அரசின் இடஒதுக்கீட்டை பயன்படுத்தி கல்வி, வேலை வாய்ப்பினை பெற்றிருந்தனர். இந்த வள்ர்ச்சியை பொருக்கத உயர்சாதி ரெட்டியார்கள், ஒரு பெண்ணை தலித் இளைஞன் கேலி செய்ததாக கூறி பிரச்சனை வெடித்தது. இதன் விளைவாக‌ 1991, ஆக‌சுடு 6ம் தேதி எட்டு த‌லித் ம‌க்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து ச‌ட‌ல‌ங்க‌ள் துண்டு துண்டாக‌ வெட்ட‌ப்ப‌ட்டு கால்வாயில் வீச‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ வ‌ழ‌க்குதான் வ‌ன்கொடுமை த‌டுப்பு ச‌ட்ட‌தின்(1989) கீழ் தொட‌ர‌ப்ப‌ட்ட‌ முத‌ல் வ‌ழ‌க்கு. இந்த‌ வ‌ழ‌க்கை திசை திருப்ப‌வும், சாட்சிக‌ளை விலைக்கு வாங்க‌வும் முய‌ற்ச்சிக‌ள் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. அதை எதிர்த்து வீரிய‌மான போராட்ட‌ங்க‌ள் ந‌டைபெற்ற‌து. அத்த‌கைய‌ போர‌ட்ட‌த்தின் போது அனில்குமார் என்ற‌ இளைஞ‌ன் போலீசாரால் சுட்டு கொல்ல‌ப்ப‌ட்டான். இப்ப‌டி தொட‌ர்ச்சியான‌ போராட்ட‌தினால், வ‌ழ‌க்கு விசாரணையின் முடிவில் 21பேருக்கு ஆயுள் த‌ண்ட‌ணை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
ஆனால் ஒட்டு மொத‌மாக‌ ப‌ர்க்கும் பொழுது 3.75% வ‌ழ‌க்குக‌ளில் ம‌ட்டுமே தண்டணை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இருந்தாலும் இத‌னை முன்னுதார‌ண‌மாக‌ கொண்டு பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் போராட‌ வேண்டும் என்ப‌தே என் வேன்டுகோள்.
இது போன்ற‌ தீர்ப்புகள் சாதி வெறிக்கு எதிரான வெற்றிக்கு அடித்த‌ள்ம் அல்ல‌வா?

Wednesday, August 22, 2007

எது மாற்று சக்தி?


தி.மு.க‌, அ.தி.மு.க‌ ஆகிய கட்சிகளின் ஆட்சிக‌ளால் தமிழகம் சீரழிந்துள்ளது. விவ‌சாய‌த்தில் ந‌லிவு, சில்ல‌றை வ‌ணிக‌த்தில் பெரும் முதலாளிக‌ள், அர‌சு அலுவ‌ல‌க‌ங்க‌ளில் ல‌ஞ்சம், ம‌ணல் கொள்ளை ஆகியவற்றால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இவ‌ற்றிலிருந்து எப்படி விடுத‌லை பெறுவது? இந்த‌ கேள்விக்கு, தமிழகத்தின் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தன்னை அறிவித்து கொண்டுள்ள விஜயகாந்த் கூறிய விடை, தான் லஞ்சம், ஊழல் அற்ற நிர்வாகத்தை தருவேன் என்றதுதான். ஆனால் அவரது கட்சியே ஊழல்வாதிகளின் கூடாரமாக இருக்கிறது. தே.மு.தி.க வின் துணை பொதுச்செயலளர் கு.ப.கிருட்டினன் அவர்கள் ஊழல் வழக்கில் கைதானவர், கோவை மாவட்ட தலைவர் ஓர் ஏழை தாயின் நிலத்தை ஏமாற்றியதாக கூறபட்டவர். இவ்வாறு ஊழல்வாதிகளை கட்சியில் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்போம் என்கிறீர்களே என விஜயகாந்திடம் கேட்டால் " கடல் நீரில் என்ன கலந்தாலும் அதன் உப்பு தன்மை மாறாது " என்கிறார். அப்படியானால், இவரது கட்சி என்ன கார்ப்பரேட் கம்பெனியா?, இவர் ஒருவர்தான் கட்சியா?. இது போக "ஊழல் என்பது தர்க்க ரீதியாக ஒரு தனி மனிதனின் ஒழுக்கத்தை சார்ந்தது". இவர் கட்சியில் உள்ளவர்களே ஊழல்வாதிகளாக இருக்கும்போது இவரால் எப்படி இந்த சமுதயத்திற்கு ஊழலற்ற ஆட்சியை தரமுடியும் . தி.மு.க‌, அ.தி.மு.க என்ற இரு போலி திராவிட‌ க‌ட்சிக‌ளின் ஆட்சிப்பிடியிலிருந்து த‌மிழ் தேச‌ம் மீள‌ வ‌ழிதான் என்ன‌? தி.மு.க‌, அ.தி.மு.க‌ அல்லாத‌ ஒரு கூட்ட‌ணிதான் இன்றைய‌ தேவை. இன்று அனைத்து த‌ர‌ப்பு ம‌க்க‌ளின் வாழ்வாதார‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்காக‌ போராடிவ‌ரும் பா.ம‌.க‌, க‌ம்யூனிசுடுக‌ள், விடுத‌லை சிறுத்தைக‌ள், புதிய‌ த‌மிழ‌க‌ம், மூவேந்த‌ர் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம், த‌மிழ‌ர் தேசிய‌ இய‌க்க‌ம், திராவிட‌ க‌ட்சி ஆகிய‌வை ஒன்றுகூடினால் ந‌ல்லாட்சியை கொடுக்க‌ இய‌லும்.